Saturday, September 26, 2015



வன்னியடி சாஸ்தா - வன்னியடி மறவன் -வன்னியன்




வன்னியடி சாஸ்தா என்ற பெயரில் உள்ள அய்யனாரை வணங்கி  பிறக்கும் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர் வன்னியன். அந்த பெயர் உள்ள வன்னியனும் - வன்னிய குலத்தில் பிறந்தவரும் ஒருவரே என்று கூறும் ஆராய்ச்சி செய்யும் அறிவாளிகள்.சிவகிரி -மற்றும் உள்ள நான்கு ஜமீன் தங்கள் வம்சாவளி பற்றி கூறியுள்ள செய்தியில் அக்னி குலத்தில் பிறந்தவர்கள் என்று  தெளிவாக கூறியுள்ளனர்.இவர்கள் பாண்டியனின் வம்சம் என்று தென்காசி செப்பேடு கூறுகிறது.



     நாற்பது குடி காவல்காரர்கள் கைது செய்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சிறை வைக்க பட்டனர். அவர்களின் 40பேர்  பெயர்களும் 40 பேர் சாதி பெயரும்  கொடுக்க பட்டுஉள்ளது. அதில் முதல் பெயர் உடையார் என்றும் சாதி மறவர் என்றும் உள்ளது. இது இத்துணை நாட்கள் இவர்கள் கண்ணில் படாமல் இருந்த காரணத்தால் உடையாரும் மறவர் என்று கூற வில்லை. இனிமேல் உடையாரும் மறவர் சாதி என்று வேகமா கத்த ஆரம்பிச்சிடுவாங்க. 

                        இதில் 12ம்  பெயர் வன்னியன் -சாதி மறவன் என்று உள்ளது.இங்கு பெயர் வன்னியனா இல்லை சாதியாக?? சாதிக்கும் பெயருக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரி நடிக்கும் காரணம் என்ன. எப்படியாவது வன்னியர் பட்டம் எங்களுக்கும் இருக்கு என்று நிரூபிக்க போராடும் இவர்களை நினைத்து அழுவதா-சிரிப்பதா என்று கூட தெரியவில்லை.                  





சிவகிரி ஜமீன் தெய்வங்கள் என்று கதைவிடும் blog:

           வன்னியனின் தொழிலும் திருட்டு என்று கூறும் கதை விட்டு ஒரு blog எழுதி அதை கொண்டு சிவகிரி ஜமீன் மறவர் என்று நிரூபிக்க பாடுபடும் கேவலங்கள்.அவர்கள் பாண்டியன் வாரிசு என்பதுக்கு தேவையான ஆதராம் இருந்தும் அவர்களையும் திருட்டு மறவர்களுடன் தொடர்பு படுத்தி ஒரு கதை சொல்லி இருக்கும் அதற்கு "சிவகிரி ஜமீன்தெய்வங்கள்" என்று கதை விடும் link கீழே கொடுக்க பட்டுள்ளது.

http://thevar-mukkulator.blogspot.in/2013/02/blog-post_6.html

அதில் கொடுக்க பட்டுள்ள சிறு பகுதி

அம்மையடி மறத்தியும தென்கரையில் ஒரு இடத்தை வெட்டிச் சீர்திருத்தி வீடுகட்டி வாழ்ந்தனர். அவர்களுக்கு அடுக்கடுக்காகஏழு ஆண்குழந்தைகளும்
 ஒரு பெண்ணும் பிறந்தனர். ஆண்மக்களுக்கு சின்னத்தம்பி வன்னியன், சிதம்பர வன்னியன், முத்துமாலை வன்னியன், ஆண்டுகொண்ட வன்னின். அழகு விலங்காடி வன்னியன், தென்கரை வன்னியன், வடகரை வன்னியன் எனப் பெயரிட்டாள். பெண்மகள் வன்னிச்சி எனப் பெயர் பெற்றாள்.

அம்மையடி மறத்தித் தன் குழந்தைகளை தன் மறக்குல வழக்கப்படி வளர்த்தாள். அவர்களும் நல்ல உடல்வாகு கொண்டவர்களாய் விளங்கினர். வேல்கம்பு, சிலம்பு போன்ற பயிற்சிகள் பெற்றனர். அவர்களுக்குத் திருமணப் பருவம் வந்தது. அம்மையடி தன் மக்களுக்குத் திருமணம் செய்ய விரும்பினாள். தன் குலத்தில் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரர்களிடம் பெண் கேட்டாள். அவர்களின் மாமன்மார்கள் நம் குல வழக்கப்படி இந்த ஏழு பேரும் திருட்டுத் தொழிலில் திறம் காட்டிச் சாதனை செய்தால் பெண்ணைத் தருகிறோம் என வாக்களித்தனர்.


இப்படி மறவர்களுடன் சிவகிரி ஜமீன்களை தொடர்பு படுத்த திருட்டு தொழில் செய்தால் பெண் கொடுப்பதாக மாமன் சொல்லும் கதை கூறி அதை ஜமீன் தெய்வங்கள் கதை என்று கூறியுள்ளனர். ஒரு தலைமுறையில் செய்த ஒரு காதல் திருமணத்தை மட்டும் வைத்து அந்த திருமணத்துக்கு பின் அந்த ஒரு வாரிசை மட்டும் வைத்து மறவர்களாக மாற்றி சொல்லுவது ஏன்?வன்னியர்கள் பெண்வழி உறவை கொண்டாடும் சமுதாயம் கிடையாது.மற்ற வாரிசுகள் பற்றி மறவர்கள் உரிமை கொண்டாட வில்லையே ஏன்?போய் அவர்களிடம் கேட்கலாமே -அப்படி  என்றால்  மீதி உள்ள வாரிசுகள் எல்லாம் வன்னியர் என்று சாதி மாறினார்களா?  ஒரு எட்கர் எழுதிய புக்கை வைத்து உரிமை கொண்டும் மூடர்கள் ஏன் அதே பிரிட்டிஷ்காரன் எழுதிய பாளையங்காரர்களின் வம்சாவளி பற்றிய குறிப்பை ஏன் ஒத்து கொள்ள முடிய வில்லை?


பாளையப்பட்டுகளின் வரலாறு பற்றிய தமிழக அரசின் தொகுப்பு :





          

அழகாபுரி ஜமீன் வம்சாவளி  கூறும் அக்னி கோத்திர வரலாறு:
      
               அழகாபுரி ஜமீன் கூறும் அக்னி குதிரை ஏறும் கதை கூறி அக்னி கோத்திர வன்னியன் என்று கூறப்பட்டுள்ள வம்சாவளி. அக்னி கோத்திரத்துக்கும் -மறவர்களுக்கும் ஒரு சம்பந்தமமும் இல்லை. 













ஏழாயிரம்பண்ணை சிதம்பர வன்னியன் வம்சாவளி :

             வம்சாவளி பற்றிய குறிப்பில் அக்னி கோத்திரம் பற்றிய குறிப்பை கூறி வன்னியர் என்று கூறிகொள்ளும் இவர்களை வன்னிய -மறவர் என்று கூறி கொள்ளும் மறவர்கள்.





சபரிமலை பற்றிய குறிப்பில் கூறப்பட்டு உள்ள சிவகிரி பாண்டியர்கள்:

          சபரிமலை தேவசம் போர்டு கூறும் செய்தி பாண்டியர்களின் வாரிசுகள் திருமலை நாயக்கர் காலத்தில் மதுரையில் இருந்து வெளியேறி  வள்ளியூர்,தென்காசி,செங்கோட்டை,அச்சன்கோவில்,
சிவகிரி போன்ற இடங்களில் வசித்து வந்தனர்.
அவர்களில் சிவகிரியை சேர்ந்தவர்களுக்கு பாண்டிய நாட்டை ஆட்சி செய்யும் உரிமைகளை திருவாங்கூர் அரசர்கள் வழங்கி உள்ளனர்.




திருநெல்வேலி -தென்காசி பாண்டியர்கள் :




உடையக்கன் என்ற மறவருக்கு  பதவி கொடுத்து சேதுபதியாக பெயர் சூட்டிய ஆண்டு  1605. அந்த காலத்திலும் வரகுணபாண்டியன்  திருநெல்வேலியில் ஆட்சி செய்த தகவல் உள்ள கல்வெட்டுகள்.1616ம் ஆண்டு வரை ஆட்சி செய்த தகவல் திருவாங்கூர் கல்வெட்டில் இருந்து அறியலாம்.பாண்டியனாக இருந்து ஆட்சி செய்த அரசர்கள் வன்னிய குலத்தில் பிறந்த அக்னி கோத்திர அரசர்கள்.இவர்களை மறவர்கள் என்பதற்கு உங்களிடம் இருக்கும் ஒரே ஆதாரம் என்று நீங்கள் கூறுவது எட்கர் எழுதிய புக் மட்டும் தான். அதே எட்கர் எழுதிய புக்கில் அவர்கள் வன்னிய குல அரசர்கள் என்று கூற பட்ட தகவல்கள் உங்கள் கண்களுக்கு தெரியாமல் உள்ளது.


சேதுபதியே  எழுந்து மரியாதை செய்யும் வன்னிய பாளையக்காரர்கள்:

                       சேதுபதிக்கு கொடுக்க பட்ட 72 பாளையங்களில்  சிவகிரி -ஏழாயிரம்பண்ணை மற்றும் உள்ள வன்னிய பாளையக்காரர்கள்   சேதுபதியை காணவரும் போது  சேதுபதி தான் ஆசனத்தில் இருந்து எழுந்து மரியாதை செய்யும் பழக்கம் இருந்து உள்ளது. இந்த மரியாதை வன்னியர்களுக்கும் மட்டுமே கொடுக்க பட்டு உள்ளது. காரணம் அவர்கள் பாண்டியன் வாரிசுகள் என்பதே. இதே மரியாதை மற்ற மறவர்களுக்கு கொடுக்க பட வில்லை.
     





பிரிட்டிஷ்காரர்கள் எழுதிய புத்தகங்களில் சிவகிரி ஜமீன் பற்றி தகவல்:

               எட்கர் எழுதிய caste and tribes புக்கில் சிவகிரி வன்னியர் என்று தெளிவாக கூறி உள்ளார்.ஆனால் திருநெல்வேலி gazetteer புக்கில் கூறப்பட்ட ஒரு தகவல் மட்டும் கொண்டு சிவகிரி ஜமீன் உரிமை கொண்டாடும் மறவர்கள்  எங்காவது ஒரு இடத்தில அவர்கள் வன்னிகொத்து என்று கூற முடியுமா? 











மறவர்களின் கிளைகளும் -கொத்துகளும் :

                       தென்னங்கிளை  என்றதில் மூன்று கொத்துகள் உள்ளதாக கூறிகொள்ளும் மறவர்கள் அதை 1.வனியன் 2.வேட்டுவன் 3.நடை வேந்தர் என்று பிரித்து உள்ளனர். இதில் வன்னியன் என்ற கொத்து எங்கும் இல்லை. வன்னிய மறவர்கள் என்று கூறுவதற்கு சிவகிரி -ஏழாயிரம்பண்ணை மற்றும் உள்ள வன்னிய பாளையக்காரர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லை. 





           சிவகிரி -ஏழாயிரம்பண்ணை -அழகாபுரி போன்ற வன்னிய பாளையக்காரர்கள் தங்கள் வம்சாவளி பற்றி கூறி உள்ள தகவல்கள் எல்லாம் தமிழக தொல்லியல் துறை புத்தகங்கள் மூலம் வெளியிட பட்டு உள்ளது. இவை எல்லாம் oriental historical manuscripts என்று பிரிட்டிஷ்காரன் தொகுத்து வைத்த தகவல்களை மட்டுமே தமிழக தொல்லியல் துறை வெளியிட்டு உள்ளது.